வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து தன்மைப்படுத்தப்பட்டு இனங்காணப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் செயற்படும் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.