ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் ஒருவித அச்ச நிலை பொதுமக்களிடையை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, பாதுகாப்புநலன் கருதி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் வகுப்புத் தடை மறு அறிவித்தல் வரை தொடருமென ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது