இலங்கையில் மேல்மாகாணத்தில் உள்ள மினுவாங்கொட பொலிஸ் நிலையம் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சிற்றுண்டிச்சாலையை நடத்தியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் நிலைய அதிகாரிகள் 85 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த அதிகாரிகளுக்கு தற்போது பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.