கதிரோட்டம் 09-10-2020
அமெரிக்காவில் ஜனாநாயகம் எப்போதும் ஓங்கியே உள்ளது என்ற நம்பிக்கை இருந்தாலும், அதில் நூறு வீதம் உண்மை இருக்கும் என்று கூற முடியாது என்பது உலகின் அரைவாசிப் பேருக்கு உள்ள கருத்தாகும். இற்றைக்கு நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கா தேசம் உலகெங்கும் யுத்தங்களை மேற்கொண்டமை, உலக நாடுகளில் இனவிடுதலை அல்லது வர்க்க ரீதியாக விடுதலையை நாடி நடத்தப்பெற்ற போராட்டங்களை நசுக்குவதற்காக செலவ செய்து நிதியும் ஆயுதமும் எத்தனை கோடி டாலர் என்பது கூட சரியாகக் கணக்கிட முடியாத ஒரு விடயமாக இருக்கும் அந்த ‘உலக எசமான்’; நாட்டில்.
இதுவரை எத்தனையோ ஜனாதிபதிகளைக் கண்ட இந்த தேசத்தின்; பெருமையை யார் காப்பாற்றினார்கள் என்பதை கணித்துச் சொல்வதற்;கு கூட அரசியல் விமர்சகர்கள் எவரும் முன்வருவார்களோ தெரியாது. அந்தளவிற்கு அமெரிக்காவில் மக்கள் வாக்குகளிலும் பார்க்க இரகசியமாகவோ அன்றி அனுமதியோடோ இயங்கின்ற சில ஸ்தாபனங்கள் தான் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது பல விமர்சகர்களின் பார்வையாகும்.
அமெரிக்க நடத்திய நியாயமற்ற யுத்தங்களுக்கு உதாரணமாக வியட்னாம் மீதான தாக்குதல்களை கூறலாம். அப்போது வியட்னாம் மக்களுக்கு ஆதரவாக உலகெங்கும் மக்கள் குரல் எழுப்பினார்கள். “அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்,” “அமெரிக்கப் படைகள் அந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும”; என்றெல்லாம் போராட்டங்கள் உலகெங்கும் நடத்தப்பெற்றன.
அந்த நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வமாக யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கு உடலெங்கும் முட்டைகளை எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார். அந்த தாக்குதல் நடத்த்பெற்றது வியட்னாமில் அப்பாவி பொதுமக்களைக் கொன்றொழித்த அந்த ஒரே காரணத்தாற்காகவே யாழ்ப்பாணத்தில் சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த ‘துணிந்த’ காரியத்தைச் செய்தார்கள். ஆனால் எங்கள் தமிழினம் போராடும் முறையிலும் கூட பிரிந்து நின்று கசங்கிப் போன காகிதங்களாக நிற்பதைக் காண்கின்றோம்.
அமெரிக்காவின் கடந்த காலம் இவ்வாறிருக்க, இந்த வாரம் அமெரிக்கா பற்றி கதிரோட்டத்தை வடிப்பதற்கு காரணம் இருக்கின்றது. கொரொனாவின் கொடுமை காரணமாக அமெரிக்காவும் கனடாவும் நிலம் சார்ந்த தொடர்புகளை கட்டுப்படுத்தி; வைத்திருந்தாலும், அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி நடைபெறவுள்;ள ஜனாதிபதித் தேர்தலே உலகின் கண்களை அந்தப் பக்கம் திருப்பியுள்ளது என்று நாம் நிச்சயமாகக் கூறலாம்.
மேலும் நடைபெறவுள்ள அமெரி;க்கத் தேர்தல் பற்றி இதுவரை எந்த நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களை கூற முன்வராத நேரத்தில் நாம் வாழும் கனடா தேசத்து பிரதமர் அவர்கள் துணிந்தும் நியாயத்தை முன்வைத்தும் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை இந்த வாரம் எமது பத்திரிகையின் முன்பக்கக செய்தியாக பிரசுரமாகியுள்ளது.
இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எமக்;கு சில இடையூறுகள் வரலாம். ஆனால் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் கனடியப் பிரதமர் ட்ருடோ இவ்வாறு நேற்று ஒட்டாவாவில் தெரிவித்துள்;ளார் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தகவலானது இந்நேரம் உலகெங்கும் உள்ள காதுகளைச் சென்றடைந்திருக்கும்.
எமது பிரதமர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்” தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் அவர்கள் சில வேளைகளில் தான் தோல்வியடைய நேரிட்டாலும், வெற்றிபெற்றவர் பதவியில் அமர்வதற்கு இடையூறாக இருப்பார் என்ற எதிர்பார்ப்புக்கள் அவரது உரையாடல்களிலிருந்து தெரிகின்றதாக பல அமெரிக்கத் தலைவர்கள் கூறியுள்ளார்கள். என்ற தகவல் கூட அமெரிக்க மற்றும் கனடிய தேசங்களில் வாழும் மக்களை சற்று யோசிக்கச் செய்திருக்கும். இதுவரை நடக்கக்கூடாதது ஒன்று நடக்கப்போகின்றது என்;பதை கனடிய பிரதமரே குறிப்பி;ட்டிருக்கும் போது. உலகம் இனிவரும் நாட்களில் எப்படி செயற்படப்போகின்றது என்பதை நாமும் பொறுத்திருந்த பார்க்கத்தான் வேண்டும்.