கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொட்டும் மழையினூடான கடும் காற்று குளிர் ஆகியவற்றை பொருட்ப்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
இன்று (11.10.2020) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு காலை 8.00 மணி முதல் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.
தரம் ஐந்து புலமை பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றைய தினம் (10.10.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
எனினும் நோர்வூட் பகுதியில் சில பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவதற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.