வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள்இ மாணவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் அலை இரண்டு இனங்காணப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கொரோனா தொற்றாளிகள் அதிகம் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில் தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களை அதிகரித்து வருகின்றனர். அதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.