இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் மாத்திரமே என அந்தப் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு நபருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.