முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 161 பேரில் இதுவரை 34 பேருக்கு கொரோனா தொற்றாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட கொரோனா சமூகத்தொற்று காரணமாக கொரோனா தொற்றாளர்களுடன் உறவினை பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் மினுவாங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 161 பேர் கேப்பாபிலவு படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுவரை 34 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது 12.10.2020 ஆம் திகதி வரை உறுதி செய்யப்பட்டுள்ளது.