மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவரும் , கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவருமான கே. கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் நியமன கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அரச அதிபராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக , மாகாண சபைகள் ,உள்ளூராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அம்பாறை பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிலர் கிழக்கு மாகாண ஆளுநரின் உதவியுடன் அபகரித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்ததன் பின்னணியிலேயே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.