முல்லைத்தீவு – முறிப்பு காட்டுப்பகுதியில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது மரக் கடத்தல் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் ஆரம்பமானது.
தொடர்ந்து மாவட்ட வன அலுவலகம் முற்றுகையிடப்பட்டதுடன், அவ்வலுவலகம் முன்பாக மரங்கள் நாட்டப்பட்டது. அத்துடன், பொலிஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது