கதிரோட்டம் 16-10-2020
இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பிரதேசம் என்ற எக்காளத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகள் பெருமளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு ஆண்டுகள் பல, அவை ஒரு பொற்காலமாக விளங்கின.
இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்த ஒரு மாகாண சபை தமிழ்த் தேசியத்தை தளமாக விளங்கியது. ஆனால் விடுதலைப் புலிகளின் இருப்பையும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் இருப்பையும் நாம் இழந்த பின்னர், அவற்றின் தொடர்ச்சியாக இன்னும் பலவற்றை இழக்கத் தயாராகிவிட்டோம். எமது கண்களுக்கு முன்பாகவே நாம் விரும்பத்தகாத காட்சிகள் மேடையேறுகின்றன.
குhணி அபகரிப்பைத் தட்டிக்கேட்ட மட்டக்களப்பு அரசாங்;க அதிபர் சில மணி நேரங்களிலேயே அந்தப் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஆனாலும் புதிதாக நியமனம் பெற்ற தமிழ் அதிகாரி ஒருவருக்கும் அவரது காதுகளில் என்னென்ன விடயங்கள் ஓதப்பட்டிருக்கும் என்பது சிறு குழந்தைகளுக்கும் புரியக் கூடிய விடயம்.
நூம் மிக முக்கியமான விடயங்களைக் கவனிக்கவேண்டும். அதுவும் உடனடியாக கவனமெடுக்க வேண்டும்.
கிழக்கில் முஸ்லிம் மக்கள் எண்ணினார்கள், விடுதலைப் புலிகள் தங்கள் இனத்தை அழித்து விடுவார்கள் என்று. இதையே முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்கள் மக்களிடத்திலே சொல்லிக் கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால், அந்த அழிவு முஸ்லிம்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கட்டியம் கூறும் என்றார்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள். அதற்காகவே இரகசியமாக அரசியல் செய்தார்கள்.
ஆனால் தற்போது எது இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்று இணைப்புக் கருவியானது துண்டாடப்பட்டிருக்கின்றது. கிழக்கில் தமிழ் மக்களது குரல்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களது குரலும் அறுக்கப்பட்டுள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனித்துவிட்டார்கள் என்ற இடத்திற்கே தமிழ் முஸ்லிம் மக்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
புpரதி அமைச்சர் ஆங்காங்கே கடுகதிப் பயணங்கள் செய்து சில அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கின்றார் என்றால் அவற்றிக்கு நாளை என்ன நடக்;கும் என்பது அவருக்குக் கூட தெரியாமலிருக்கலாம். அவருக்கு அருகில் முதல்நாள் அமர்ந்திருந்த அரசாங்க அதிபருக்கு அநீதி நடந்திருக்கின்றது. நாளை யாருக்குமே இது நடக்கலாம்.
இதற்கெல்லாம் பதிலாகத்தான் தற்போது கிழக்கில் நடைபெறும் பல அத்துமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அதனால் கிழக்கு மாகாணத்தில் இன்று நிலப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது
கிழக்கில் அரசாங்கம் நிலம் சம்பந்தமாக பலவித அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. இந்த இடத்தில் ஜனநாயகக்கட்டமைப்புகளை தொடர்ச்சியாகப் பேணவேண்டியது அங்கு வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களது உடனடிக் கடமையாகும். அதேபோன்று திருகோணமலை திரியாய காணிப்பிரச்சினை மட்டக்களப்பு எல்லைக்காணி பிரச்சினை என நிறையப்பிரச்சினைகள் உள்ளன. இதில் தொல்பொருளியல் வனப்பாதுகாப்பு என பலதரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிழக்கில் மட்டும் உருவாக்கப்பட்ட தொல்லியல் செயலணியை கேள்விக்குரியதாகும் திருகோணமலையில் தொல்லியல்செயலணியின் தாக்கம் கூடுதலாக உள்ளது. குறிப்பாக குச்சவெளி பிரதேசத்தில் மட்டும் அதிகூடிய 36இடங்களில் காணிப்பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
எனவே வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை அமைவதும், இரண்டு மாகாணங்களும் புவிசார் தொடர்புகளை தங்கள் பண்பாட்டு கலாச்சார சமூகம் சார்ந்த விடயங்களோடு இறுக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதையும் நாம் இந்த வார கதிரோட்டத்தின் மூலம் வலியுறுத்துகின்றோம். கிழக்கில் தமிழ் மக்களதும் முஸ்லிம் மக்களதும் குரல் நசுக்கப்பட்டு அந்த மக்கள் பலமற்றவர்களாக இருப்பதற்கு காரணம் மக்களல்ல, மாறாக தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் என்பதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தங்கள் அழகிய மாகாணத்தையும் தமிழ்த் தேசியத்தையும் அதன் செழிப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்;கு தங்கள் பிரதிநிதிகளுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டே அவர்கள் தொடர்ச்சியாக இயங்க வேண்டும். அப்போது தான் அவர்களது கழுத்துக்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ‘கயிறுகள்’ விலகிச் செல்ல வாய்ப்புக்கள் உண்டாகும்.