20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று, கனடிய தூதுவரிடம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள அமைச்சின் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே, நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தினால் தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார்.