அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை நான்காவது நாளாக தேடி வரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இன்று (இலங்கையில் திங்கட்கிழமை 19ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது) அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பஸ்களில், புத்த ளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச்சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங் களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது