படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 20ஆவது நினைவுதினம், இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில், வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அன்னாரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி சுடரினை சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் ஏற்றி, மலர் மாலையும் அணிவித்தார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் மெழுகுதிரி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையினை பொ.மாணிக்கவாசகம் நிகழ்த்தியிருந்ததுடன் நன்றியுரையினை ஊடகவியலாளர் ந.கபிலநாத் தெரிவித்தார்.