தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஆனந்தசங்கரி அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய ஆனந்தசங்கரியை நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி பிரித் ஓதி ஆசி வழங்கியுள்ளார். இந்தச் செய்தி இலங்கையில் தற்போது பேசப்படும் ஒரு செய்தியாகவே உள்ளது. இலங்கையின் ஜனாதிபதி கூட பௌத்த பீடங்களின் குருமார்களை நேரடியாக வே சென்று ஆசி பெறுவது உண்டு. இவ்வாறு ஒரு விகாரை தேரர் ஒருவர் திரு ஆனந்தசங்கரியை நேரடியாகச் சென்று உடல் நலம் பெற ஆசி வழங்கியது ஒரு நெகிழ்ச்சியான விடயம் என்றே எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இங்கு காணப்படும் அங்கு எடுக்கப்பெற்றதாகும்