வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களில் 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி 3 பேருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் பிரபல (மாகா) தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றதுடன் உள்ளூர் தொழிலாளிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். பல்வேறு இடங்களிற்கும் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.