ஏலையாக. முருகதாசன்
சும்மா கிடந்த கொதி எண்ணையை தம்முடைய காலில் தாமே ஊற்றிவிட்டு 800 ஊற்றி விட்டதே என்று காலை உதறி உதறியுரியூப் காணொளித் தளத்தில் தமிழகச் சில அரசியல்வாதிகளும் தமிழகத் திரைப்படத்துறையைச் நேர்ந்தசிலரும் துள்ளாத குறையாகத் துள்ளி விஜய் சேதுபதியையும், இலங்கை கிரிக்கட் அணிவீரரான முத்தையா முரளிதரனையும் தமிழினத் துரோகிகள் என்ற மாயை உருவாக்க, சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தது போல தமிழகயுரியூப் பதிவாளர்கள் வருவாயைதேடும் நோக்கில் தாங்கள் தான் இனமான உணர்வாளர்கள் என வேசம் போட்டு விமர்சனங்களை அள்ளி வீசிக் கொண்டே போகிறார்கள்.
இந்த விமர்சனங்களைப் பார்க்கும் போது உண்மையில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
தமிழர்கள் இரண்டு விடயங்களைஎப் பொழுதும் கைவசம் வைத்திருப்பார்கள். ஒன்று அவசரப்பட்டு பொன்னாடை போர்த்துவது, இரண்டாவது அவசரப்பட்டு துரோகிப் பட்டம் கொடுப்பது.
இப்பஅவர்கள் விஜய்சேதுபதிக்கும் முத்தையாமுரளிதரனுக்கும் கொடுத்தபட்டம் தமிழினத் துரோகிகிகள்.
ஒன்றுமில்லாத பிரச்சினையை ஊதிப் பூதாகரமாக்கு வதில் தமிழக ஊடகங்கள் கலாநிதிப் பட்டங்கள் பெற்றவர்களே. தமது வருமானத்திற்கு ஏதாவது சூடான விசயம் வேண்டுமென்பதில் சமாந்தரமான பாதையில் பயணிப்பவர்கள் தமிழகத் தொலைக்காட்சிகளும் யுரியூப்பதிவாளர்களும்.
தமிழகத்தை பூர்வீகவேராகக்; கொண்டபோதிலும் மலையகத்தில் பரம்பரையாக வாழ்ந்து இலங்கையனாக வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தையாமுரளிதரன் என்ற தமிழனின் புகழால் அவன் தமிழன் என்றுபெருமைகொள்ளாமல், 800 திரைப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும்; முடிச்சுப் போட்டு போலிக்கூக்குரல் போட்டுக் கொண்டிருப்பகவர்களை நினைக்கும் போது அவர்களின் நாடகம் சரியாகவே புரிகின்றது.
இலங்கையின் கிரிக்கட் அணியில் இருக்கின்ற ஒரேயொரு தமிழன் முத்தையாமுரளிதரன் என்பதுயாவரும் அறிந்ததே. அது பெருமைக்குரிய விசயமே.
இலங்கை அரசாங்க அதிகாரிகளுடனோ, அமைச்சர்களுடனோ முத்தையா முரளிதரன் மட்டுமே தொடர்பிலிருப்பது போல தமிழகத்திலிருக்கும் சில அரசியல்வாதிகளும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் போலி ஆவேசம் கொள்கிறார்கள்.
இந்தியாவின் வடமாநிலத்திலிருந்தும், கேரளத்திலிரந்தும், தமிழகத்திலிருந்தும் பலவிதமான அன்றாட வாழ்விற்குத் தேவையான பாவனைப் பொருட்கள், உடைகள் போன்றவை இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனை உற்பத்தி செய்பவர்கள் இலங்கையின் வணிகத்துறை அமைச்சகர்களுடனோ அதிகாரிகளுடனோ வணிக நோக்கமாகத் தொடர்புகொள்ளத் தான் செய்வார்கள். அவர்களுடன் விருந்துண்பார்கள். அத்துறை சார்ந்த அமைச்சர்களோ அத்துறை சார்ந்த அதிகாரிகளோ இந்தியாவிற்கு வருகைதந்தால் இலங்கைக்கு திரைப்படம் உட்பட தமது உற்பத்திகளைஏற்றுமதி செய்தவர்கள் சந்திப்பார்கள் விருந்தளிப்பார்கள். இது வணிக உலகின் யதார்த்தம்.. அந்தப் பொருட்களைவிற்கும் வியாபரிகளின் பணவருவாயிலிருந்தும்கணிசமானநிதியை இலங்கைவரித்திணைக்களம் வரியாக அறவிடுகிறது. இலங்கையின் பலவருவாய்க் கட்டமைப்பிலிருந்து கிடைக்கும் வரிப்பணமே இலங்கை மத்திய வங்கியின் திறைசேரிக்கான பணமாகும். அதுவே இலங்கையின் அனைத்துக் கட்டமைப்புகளின் வரவுசெலவினைக் கையாளுகின்றது.
இந்தத் திறைசேரிப் பணந்தான் வரவுசெலவுக் கணக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பரிக்கப்படுகின்றது. இத்திறைசேரிப் பணத்திலிருந்துதான் முப்படைக்கும் ஒதுக்கப்படுகின்றது. ஒதுக்கப்பட்டபணத்திலிருந்து தான் முப்படைக்கான ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் போதுதமிழீழவிடுதலைப்புலிகளைஅழிப்பதற்கும் தமிழர்களை அழிப்பதற்கும் அப்பணத்திலிருந்தும் வாங்கப்பட்ட ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன.இது நிராகரிக்க முடியாததர்க்க ரீதியான உண்மை.
அடுத்ததர்க்க ரீதியான கேள்வி எழுகின்றது. ஆயுதம் வாங்க பணம் எங்கிருந்துகிடைத்தது. அதற்கானபதில் இலங்கைமத்தியவங்கியிலிருந்து கிடைத்தது என்பதே. மத்திய வங்கியின் திறைசேரிக்கு எப்படிபணம் கிடைத்தது என்றால் வருமான வரித்திணைக்களத்திற் கூடாக. அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்றால், வரி மூலம், வரி எங்கிருந்து கிடைத்தது என்றால் இலங்கையின் அனைத்துக் கட்டமைப்புகளிடமும் இருந்துஎன்பதுதான் பதில்.
அவைகளில் ஒன்றானவணிகம் சார்ந்ததொழிலில் இறக்குமதியும் ஒன்று. இலங்கை பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா.எனவே இந்தியாவிலிருந்து இறக்குமதியான இறக்குமதிக்கானவரி, மொத்த விற்பனையாளர்களுக்கானவரி, சில்லறை விற்பனையாளர்களுக்கான வரி எனஅனைத்தும் இலங்கையின் வருமானம். இந்த வருமான நிதியிலிருந்து தான் ஆயுதமும் வாங்கப்படுகின்றது.
அந்தநிதியுந்தான் தமிழர்களைக் கொல்லும் ஆயுதமாகவாங்கப்பட்டதுஎன்பதேஉண்மை.எனவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் வருமானத்திலிருந்துந்தான் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்ற வகையில் தமிழகத்திலிருந்து சிங்களவர்களுக்கு கொம்பு சீவிவிடும் சிலஅரசியல்வாதிகளும் சிலதிரைப்படத்துறையினரும் இந்தியப் பொருட்களைஏற்றுமதிசெய்யாதீர்கள்,அதன் வரிகளும் தமிழர்களைகொல்லப் பயன்படுகின்றதுஎனதடுத்திருக்கவேண்டுமல்லவா.
இதைவிடதமிழகச் சினிமாப் படங்களை இலங்கைக்குஏற்றுமதிசெய்வதால் அதிலிருந்து, இறக்குமதி வரி, படவிநியோகவரி,படத்தைதிரையிடும் தியேட்டர் கொடுக்கும் வரி, படம் பார்ப்பவர் நுழைவிதழ் எடுக்கும் போது அவர் அவரையறியாமலேநுழைவிதழ் விலையுடன் சேர்த்துக் கொடுக்கும் வரி இவையுந்தான் அரசாங்கவருவாய். அந்த வருவாயும், மொத்தவருவாயின் ஒரு பகுதியாகும்.
எனவேதமிழகத்திரைப்படமும் இலங்கை அரசாங்கம் ஆயுதம் வாங்க உதவியிருக்கின்றது. எனவேதமிழர்களைக் கொல்ல தமிழ்ச் சினிமாப் படங்கள் உதவியிருக்கின்றன.
எனவே,விஜய் சேதுபதிக்கு எதிராகவும், முத்தையா முரளிதரனுக்கு எதிராக கருத்துக் கூறிய திரைப்படத்துறையைச் சார்ந்தபாராதிராஜா, வைரமுத்து உட்பட அனைவருமே இலங்கைத் தமிழர்களைக் கொல்லஆயுதம் வாங்கநிதிகொடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். ஒரு படத்தை எடுப்பதன் மூலம் வருவாயைத் தேடிக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா, திரைப்படங்களுக்கு பாடல் எழுதிவருவாயைப் பெற்றுக் கொண்டகவிஞர் வைரமுத்து ஆகியவர்களின் படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டதால் அவர்களையும் இலங்கைத் தமிழர்களுக்குஎதிரானதுரோகிகள் என்றுஏன் சொல்லக்கூடாது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கைவரலாற்றில் விஜய் சேதுபதிநடித்து படம் வெளிவந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பிரளயமும் நடக்கப் போவதில்லை.அது இலங்கை அரசிற்கு சார்பான ஆவணமாகமாறி ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிற்குசார்பாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை.
எனவே இலங்கைக்கு எங்களுடைய திரைப்படங்களை ஏற்றுமதி செய்வதால், அப்படங்களும் ஒருவழியில் இலங்கை அரசிற்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றது. அந்த வருவாயிலிருந்தும் ஒரு பகுதி ஆயுதம் வாங்கப்படுகின்றது. ஆந்த ஆயுதங்களுந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்தது, தமிழர்களைக்கொன்றது என்று அறிவுபூர்வமாக, தர்க்க ரீதியாக சிந்தித்து தமிழகத் திரைப்படங்களைதமிழகத் திரைப்படத் துறையினர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யாமல் விடுவார்களா.
எனவே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்த படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் நடிக நடிகைகள், பட உருவாக்கத்திற்குபணிசெய்தவர்கள் அனைவருமே துரோகிகள் தான்.விஜய் சேதுபதிதுரோகிஎன்றால், இலங்கையுடன் திரைப்படவணிகம் தொட்டு, அனைத்து வணிகங்களையும் உள்ளடக்கிய ஏற்றுமதி வணிகம் செய்தவர்கள் அனைவருமே துரோகிகள் தான்.
எனவேஇலங்கையைச் சேர்ந்ததமிழ் கிரிக்கெட் வீரனின் திரைப்படம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து எந்த விமர்சனமும் பெரிதாகவரவில்லை. காரணம் முத்தையாமுரளிதரனின் படம் வெளிவந்தாலென்ன வெளிவராவிட்டால் என்ன இலங்கைத் தமிழர்களுக்கு அதைப் பற்றி பெரிய அக்கறை எதுவுமில்லை.
படம் வந்தால் விரும்பியவர்கள் பார்ப்பார்கள்,விரும்பாதவர்களும் ஏதாவதுபிழையைத் தேடுவதற்காக பார்ப்பார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதியைநடிக்காமல் தடுத்துநிறுத்தியமை, இனமான உணர்வென்றபோலிப் போர்வை.
2009 ஆண்டுபோர் முடிந்ததுதனக்கு மகிழ்ச்சியான நாள் என்று முத்தையா முரளிதரன் சொல்லியதன் அர்த்தத்தைதமக்குச் சாதகமாகமாற்றிதமிழகதிரைப்படத்துறையைச் சேர்ந்தசிலரும், தமிழக அரசியல்வாதிகள் சிலரும் அவரைத் தமிழினத் துரோகியாகக் காட்ட முனைகிறார்கள்.
போர் முடிவுக்குவந்தபோதுஅவர் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் அனைவருமேமகிழ்ந்தார்கள: தமிழீழவிடுதலைப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதே என்ற கவலை அவர்களிடமிருந்த போதிலும், போரினால் உறவுகளை இழந்தவர்களும், குடியிருந்த வீடுகளை இழந்தவர்களும், காணிகளை இழந்தவர்களும், வசதியாக வாழ்ந்தவீடுகளை, இருந்து இடத்தை விட்டுகையில் கிடைத்ததை மட்டுமே எடுத்துக் கொண்டு அங்குமாறி இங்கு இங்குமாறி அங்கெனஎல்லாஊர்களுக்கும் ஓடி, மரநிழலிலும் ,சாக்குத் தடுப்பிலும்,தகரத் தடுப்பிலும் வாழ்ந்துமக்கள் அலையோஅலையெனஅலைந்து போர் முடிந்தவுடன் ஆறுதல் மூச்சுவிட்டார்கள்.போர் முடிந்ததுஎனமகிழ்ந்தார்கள். இனியாவது ஒரு இடத்தில் நிம்மதியாகவாழலாம் என அமைதியானார்கள். பலவருடப் படபடப்பான இதயம் போர் முடிந்ததும் சுயநிலைக்குவந்தது.
இன்றுவிஜய் சேதுபதியையோ, முத்தையாமுரளிதரனை யோதுரோகி என விமர்சிப்பவர்கள், ஓடியோடிக் களைத்தமக்களின் வாழ்க்கையைவாழ்ந்திருக்கிருக்கிறார்களா. வாழ்ந்தால்தான் அந்த வலி தெரியும்.ஊடகவெளிச்சத்திற்காகவும் பரபரப்பிற்காகவும் உசுப்பேத்தல் கருத்துக்களை வெளயிடுபவர்களின் படங்கள் இலங்கையில் திரையிடப்பட்டிருந்தால் அவர்கள்தான் பெருந்துரோகிகள்.
நீங்கள் உண்மையான அக்கறையுள்ளவர்களானால், கமலகாசன் – அர்யுன் நடிப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோதுஅப்படத்தை கேவலப்படுத்தி வெளிவந்த குருதிப்புனல் படம் தமிழகத்தில் அமோகமாக ஓடியதே அப்பொழுது என்ன செய்தீர்கள். கிட்டுவை கொச்சைப்படுத்தி அந்தப் படத்தில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதே அப்பொழுது எங்கே போனீர்கள்.
இலங்கைத் தமிழனைவைத்துநீங்கள் அரசியல் செய்யவேண்டாம். போதாக்குறைக்கு நம்ம தொலைக்காட்சி ஒன்று இலங்கையில் ஒருவரைவைத்து முரளிதரனுக்கு எதிராக பேட்டியொன்றை நடத்தியது. அவர்கள் தமதுதொலைக்காட்சியைப் பார்க்கவணிகத்தை இனமான போர்வையில் செய்கிறார்கள்.
இப்படம் தடைப்படுவதன் மூலம் இலங்கைகிரிக்கட் அணியிலிருக்கும்சிங்களவீரர்கள் மகிழ்ச்சியடையவைக்கமுயற்சிக்கிறார்கள்.
ஒருதமிழ் கிரிக்கட் வீரனின் விளையாடடுவிவேகத்தைஎடுத்துக்கூற வரும் திரைப்படத்துக்குமுட்டுக்கட்டைபோடயார் எந்த உளவு நிறுவனம் உங்களைப் பயன்படுத்துகின்றது என்பது இலங்கைத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இதைவிட,தமிழக,யூரியூப் பதிவாளர்கள் தமக்குவருவாயைத் தேடுவதற்காகமுத்தையா முரளிதரனைப் பற்றியும் , விஜய் சேதுபதியைப் பற்றியும் பெரியஆய்வுகளைச் செய்து சப்ஸ்கிறைப் பண்ணுங்க, பெல் படுஇடனை அமத்துங்க என்று சொல்லி வியாபாரம் செய்கிறார்கள்.
புhரதிராஜா ஐந்துஆண்டுகளுக்குமுந்திஆனந்தவிகடனில் „தமிழ்நாட்லஎங்கேதமிழன் இருக்கிறான், எல்லாரும் இங்கிலிசிலைபேசுறாங்க„ என்று சொல்லி ஒருபேட்டிகொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் 222 ஆங்கிலவார்த்தைகளைப் பாவித்திருந்தார். இதுதான் அவரின் இலட்சணம்.
முத்தையாமுரளிதரனின் 800 திரைப்படம் யாராவதுஒருநடிகர் நடித்துவரத்தான் போகின்றது. எங்கள் ஊர்த்தமிழன் என்றுஉலகம் பூராவும் உள்ள இலங்கைத் தமிழர்களும், நம் நாட்டவன் என்றுசிங்களவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.