ஜேஆர்- ராஜிவ் காந்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அமைதிப்படையாக சென்ற இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்று 21ம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ் போதனாா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
1987ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம் வைத்தியசாலையில் கடமையாற்றிய பணியாளர்கள் 21 பேரை மிகக் கொடூரமாக சுட்டுப்படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் சோகம் தலைதூக்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
One Comment
Pingback: நாடு கடந்த தமிழீழ அரசின் முயற்சியினால் விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசின் தடை தவறான