கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று காலை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவரோடு பேசுவதற்குக் கூட அவரது கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.