விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்து அந்த அமைப்பின் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது .
எனினும் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் உலகில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டுள்ளனர் .
அவர்களால் எந்த நாட்டினதும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்துள்ளது . விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடரும் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.