தாயின் மடியில் : 05.02.1944
சிவனின் அடியில்: 26.09.2020
“எம் இதயங்களில் ஒளிவீசிய பூரண நிலவே -எம்
கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ!
எம் அருமைத் தெய்வமே,
வாழ்வே மாயமென்று எமக்கு உணர்ந்தி விட்டுச் சென்றனையோ…
பூரண வாழ்வை வாழ்ந்து முடித்து விட்டேன் என்று –
பூரண நிம்மதியுடன் எம்மைத் தவிக்கவிட்டுச் சென்றனையோ!
தலைமகனாக, நற்கணவராக, பாசத்தந்தையாய்,
ஆசை மாமனாய், பிரியமுள்ள அப்பப்பாவாய்,
உற்ற சகோதரனாய், நேசமுள்ள தை்துனராய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமரே!
எங்கள் வாழ்வின் எல்லைவரை தெய்வமாய் இருந்து
எம்மை என்றும் காத்திடுங்கள்…”
தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராமலிங்கம் சண்முகரட்ணம் அவர்கள் மறைவு அறிந்து எமக்கு நேரிலும், தொலைபேசியிலும், மற்றும் பல வழிகளிலும் அனுதாபங்கள் தெரிவித்ததோடு உதவிகள் புரிந்தவர்களுக்கும் எம் இதயங்கனிந்த நன்றிகள்.
இங்ஙனம்: குடும்பத்தினர்
தகவல் : மனைவி
சகுந்தலாதேவி (தேவி) : (416) 335 – 9450