– பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் –
தேர்தல்கள் ஆணையத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்களைக் கணக்கெடுக்கும் படிவங்கள் (Body Count – BC forms) விநியோகிக்கப்பட்டுப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. எனினும், இப் படிவங்களைப்பூர்த்திசெய்துகையளிக்காதவர்கள் இன்னும் இருப்பதால், இம்மாதம் 29ஆம் திகதி வரையில் அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகயாழ் – மாவட்டத்தேர்தல்கள் அலுவலகம் அறியத்தந்துள்ளது. வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான இந்தக் காலக்கெடுவை, எவரும் தவறவிட்டு விடவேண்டாம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேருநர் இடாப்பில் பெயர்கள் பதியப்படவேண்டியஅவசியம் குறித்துத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தஅறிக்கையில் அவர் மேலும்,வாக்களிப்பது ஒருவரது ஜனநாயகக் கடமை. அது அவருடைய மிகப் பெரும் பல முங்கூட இதன் பொருட்டு ஒருவர் தனதுபெயரைத்தேர்தல்கள் ஆணையத்தால் ஆண்டுதோறும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் தேருநர் இடாப்பில் இடம் பெறச் செய்வது அவசியமானதாகும். ஆனால், இவ்விடயத்தில் போதிய தெளிவின்மை மற்றும் அக்கறையின்மை காரணமாகப் பலரும் அதற்குரிய படிவங்களைப் பூர்த்தி செய்துகையளிக்காது இருந்துவிட்டு, தேர்தல்களின் போதுதங்களுக்கு வாக்காளர் அட்டைகள் வரவில்லையென்று அங்கலாய்க்கின்றனர்.
போரினால் ஏற்பட்டபல்லாயிரக்கணக்கானஉயிரிழப்புகள்,அதைவிடஅதிகமானபுலப் பெயர்வுகள்,ஒன்றுஅல்லது இரண்டுகுழந்தைகளுக்குமேல் பெற்றுக் கொள்ளவிரும்பாத பெற்றோர்களின் மனப்பாங்கு போன்ற காரணங்களினால் வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைபாரியவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில்,எஞ்சியுள்ளவர்களில் அநேகர் வாக்காளர்களாகப் பதிவதற்குக் கரிசனைகாட்டாதிருப்பதுஏற்றுக்கொள்ளத்தக்கதுஅல்ல.
இலங்கையில் தற்போதுள்ளவிகிதாசாரத் தேர்தல் முறையில் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயேமக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதால், வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவுமக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் குறையச் செய்துவிடும்.உதாரணத்துக்கு,வடக்கு–கிழக்கில் அதிகஆசனங்கள் கொண்டயாழ்ப்பாணம் – கிளிநொச்சிதேர்தல் மாவட்டம் 2010ஆம் ஆண்டு 9 ஆசனங்கள் என்றநிலையில் இருந்து, 2015ஆம் ஆண்டு 7 ஆசனங்கள் என்றாகியுள்ளது. இனிவரும்தேர்தல்களில் மேலும் 2 ஆசனங்கள் குறைவடைந்து 5 ஆசனங்கள் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு,வாக்காளர்களின் எண்ணிக்கைகுறைவடைவதால் இம்மாவட்டங்களில் இருந்துபல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துசெல்கிறது.
இலங்கையில் வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றயூன் 1ஆம் திகதியன்று 18 வயதைப் பூர்த்திசெய்திருக்கக்கூடிய இலங்கைக் குடிமகனாகஉள்ளஎவரும் வாக்காளராகும் தகுதிபெற்றவர் ஆவார். வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துசென்றுஅங்குபிரஜாவுரிமைபெறாது இலங்கைக் கடவுச்சீட்டைதற்போதுகொண்டுள்ளஎவரும், இரட்டைப் பிரஜாவுரிமைபெற்றிருக்கும் எவரும் தேருநர் இடாப்பில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்யமுடியும். இவர்களில் இதுவரைபதிவுகளைமேற்கொள்ளாதவர்கள் கிராமசேவையாளர்களுடன் அல்லது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு இக்காலக்கெடுவுக்குள் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுவது அவசியமானதாகும். வாக்காளர் பதிவை ஊக்குவிப்பது அதிகாரிகளினது மாத்திரமல்ல் அரசியல்வாதிகளினது பொறுப்பும் ஆகும். இவ்விடயத்தைஒருதேசியப் பணியாகக் கருதிஅனைத்துத் தரப்பும் இதில் அக்கறைகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.