முன்பக்கம் 23-10-2020
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருக்கின்றது.
இவ்வாறான ஒரு சாதகமான தீர்ப்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின மூலமாவே கிட்டியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter Caroline Robinson of Bindman’s LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சார்பான சட்டத்தரணிகளாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின்; QC Angus McCulloch Q.C Rachel Tony. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டத்தரணியாக ஆஜராகினார் வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில், எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் அடுத்த நடவடிக்கையாக பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தீர்ப்பையும், அது குறித்த சிபார்சையும் ஆணையம் பிரித்தானிய அரசுக்கு அனுப்பிவைக்கும்.அதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது. இந்த தீர்ப்பு குறித்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உற்சாகமடைந்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.