கோடையில் தொடங்கி
கொடிகட்டிப் பறக்கிறது கொரோனா.
இன்னும் அது உயரத்தில் தான்
இப்போது குளிரின் முற்றுகைக்குள்
மனித உடல்கள் மட்டுமல்ல
மரங்கள் தாவரங்கள் எல்லாமே
இந்த இரண்டுக்குள்ளும்
அழகையும் புன்னகையையும் இழக்காமல்
பூக்களின் இருப்பு தொடர்வது எப்படி?
மேப்பிள் மர இலைகள் நிலத்தில் கொட்டிப் பரவி இந்த டெய்லியாக்களின் பரவசத்தை
பறித்து விடுகின்றனவோ..
தேசத்தின் தேசிய மரத்தின் இலைகள் கூட
தேசிய கீதத்தைப் போலவே மதிக்கப்படுகின்றன இங்கு
தரையில் உதிர்ந்த மறுநிமிடம்
கடதாசிப் பைகளுக்குள்ளே பக்குவமாய் சேகரித்து
வீதியோரத்தில் வரிசையாய் அணிவகுப்பு.
ஆமாம், எம் வீட்டு முற்றத்தில்
அழகிய டெயிலியாப் பூக்களும்
மரங்களிலிருந்து உதிர்ந்த மேப்பிள் இலைகளும்
குளிரோடு கூடிக் களித்தபடி…