ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர அவரது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனால் ஹக்கீம் இப்போது தனித்து விடப்பட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
1) டயானா கமகே- ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினர்
2) நஸீர் அஹமட்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
3) ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் – முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு
4) பைஸால் காஸீம்- முஸ்லிம் காங்கிரஸ்
5) எச்.எம்.எம். ஹாரிஸ் – முஸ்லிம் காங்கிரஸ்
6) எம்.எஸ். தௌபீக் -முஸ்லிம் காங்கிரஸ்
7) அரவிந்த குமார்- தமிழ் முற்போக்கு முன்னணி
8) இட்ஸாக் ரஹ்மான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்த்து அவரது கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் ஹக்கீம் இப்போது தனித்து விடப்பட்டுள்ளார்.