துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சமரசிங்க ஆராச்சிகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக குறித்த குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச குழுவிற்கு அறிவிக்கவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.