பலபிட்டிய கடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கப்பல்துறையில் முன்னர் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் மூலம் இந்த நபர்களுக்கு வைரஸ் பரவியிருப்பதாக சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த கப்பல்துறை ஊழியர்களுடன் நெருங்கிய சுமார் 50 பேருக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 34 பேருக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இதற்கமைய அவர்களில் 15 பேருக்கு தொற்று உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர்களுடன் நெருங்கிப்பழகியவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எழுந்துள்ள ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டுவில கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.