தற்போதைய அரசாங்கம் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாட்டின் நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தேசிய அமைப்பொன்றை உருவாக்க நாட்டின் பிரதான பிக்குகள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முன்னின்று செயற்பட்ட சில முக்கிய பிக்குகளும் இந்த அமைப்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
20வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிக்குகள் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் கணக்கிலெடுக்காமை மற்றும் எம்சிசி உடன்படிக்கை தொடர்பில் மக்கள் எதிர்ப்பை உருவாக்குதன் நோக்கமாக இந்த அமைப்பு செயற்படவுள்ளது.
இந்த அரசாங்கத்தை தொடர்ச்சியாக நம்ப முடியாதென பிக்குகள் தெரிவித்துள்ளனர்.