இரத்தினபுரி பொதுச் சந்தையில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அண்மையில் மீன் கொள்வனவு செய்வதற்காக பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சூழ்நிலை காரணமாக இரத்தினபுரி முவகம பகுதியில் சுமார் 100 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுய தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.