ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தனவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் தெரிவு செய்யப்பட்ட பின்னர் விரைவில் கட்சியின் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்படுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களை எட்டும் நிலையில் ஐதேகவிற்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு எவரும் தெரிவுசெய்யப்படவில்லை.
ரவி கருணாநாயக்க அக்கில விராஜ் காரியவசம் ஜோன் அமரதுங்க போன்றவர்கள் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு சவால் விடுத்து வருகின்றனர்.
எனினும் இவர்களை புறந்தள்ளி ருவான் விஜேவர்த்தனவை நியமிக்க ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ள நிலையில் அடுத்து இடம்பெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.