கொரோனா வைரஸ் பரவியுள்ள ஐந்து மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
ஐந்து மாவட்டங்களில் வைரஸ் பரவி உள்ளது. கொழும்பு கம்பஹா களுத்துறை குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அதனால் இதனை தடுப்பதற்கு தேவையான முடிகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அபாயம் உள்ள மாவட்டங்களின் எல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும். கொரோனா ஒழிப்பு செயலணிக்கு நாம் இதனை கூறியுள்ளோம். சுகாதார அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். நாடு முழுவதும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.