கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி அண்மையில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு, அங்கு, மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றுமாலை இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, இன்று காலை, கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி இராணுவத்தினரின் பாதுகாப்பு வளைளயத்துக்கள் கொண்டு வரப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.