அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக கடிதமொன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளனர்.