அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்டுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி சுகாதார சேவைகள், விமான நிலையம், வெளிவிவகார அமைச்சு, தீயணைப்பு திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் பணிபுரிவோரே தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு வேளை அனுமதிக்குப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லும் போதும் வெளியேறும் போதும் கொரோனா தொற்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.