அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கல் பொம்பியோ, இன்று புதன்கிழமை கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.
