வெலிஓயா சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட இராணுவஅதிகாரி தகாத வார்த்தைகளை பிரயோகித்து மருத்துவமனையின் தலைமை அதிகாரியை நிந்தனை செய்தார் என குறிப்பிட்டுள்ளது
பிரிகேடியர் கேகேஎஸ் பரகும் என்ற அதிகாரிக்கு எதிராகவே அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலையின் பணிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
யுத்தகாலத்தின் போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினர் பொலிஸாரிற்கு உளவியல்ரீதியான மருத்துவ ஆதரவை வழங்குவதற்காக மருத்துவர்கள் படைத்தரப்பினரை கௌரவத்துடன் நடத்தினார்கள் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் குறிப்பிட்ட அதிகாரி தனது நடத்தைகள் மூலம் படைத்தரப்பிலிருந்து எதிர்பர்ர்க்கப்படும் நடத்தையின் தராதரத்தை எட்டதவறிவிட்டார் என மருத்துவர்கள் மக்களின் கௌரவத்தை உறுதி செய்ய தவறிவிட்டார் என அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.