கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞன் ஒருவர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.