மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை விலக்கிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலேயே மனோ கணேசன் விலகுவதாக அறிவித்துள்ளார்.