நாட்டின் 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.
நேற்றைய (29) நிலவரப்படி வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கோவிட் 19 நோயாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. எனினும் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செயலணி குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹாவில் இன்று காலை 6 மணிவரை 2 ஆயிரத்து 960 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு ஆயிரத்து 760 கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்