வத்தளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களில் 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதாக வத்தளை நிர்வாக பொது சுகாதார அதிகாரி வருண அபேசேகர தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1000ற்கும் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆண் ஊழியர்கள் நேற்று (30) இரவு வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டதுடன் தொற்றுக்கு உள்ளான பெண் ஊழியர்கள் இன்று நண்பகல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.