இலங்கையில் இன்றையதினம் 20வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் 54 வயதுடைய கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண் ஒருவராவார்..
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் ஒரே வாரத்தில் இடம்பெற்ற 5வது மரணம் இதுவாகும். கடந்த அக்டோபர் 22ம் திகதி முதல் இன்று 31ம் திகதி வரை இந்த மாதத்தில் மாத்திரம் 07 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை திடீரென உயிரிழந்தவர்கள் குறித்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களது உடல்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 27ம் திகதி ஒரே தினத்தில் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இளவயது மரணம் பதிவாகியதும் அன்றையதினமாகும்.