பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆயிரத்து 100 இற்கு அதிகமான பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கரையோர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 10 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் குறித்த பொலிஸ் நிலையம் முடக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை மற்றும் துறைமுக பொலிஸார் குறித்த கரையோர பொலிஸ் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் 83 பேர் பீசிஆர் பரிசோதனைக்கென தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.