பேலியகொட மீன்சந்தையில் கொரோனா பரவியமைக்கு நாணயத்தாள்களே காரணமென, தெரியவந்துள்ளது.
சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த மீன்சந்தையில் மீன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் எச்சில் மூலமும் இத்தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பேலியகொட கொத்தணி ஊடாக கடந்த 13 நாள்களில் 5,513 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.