முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நகரிற்கு அண்மையாக யானைதாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாயன்று இரவு 10.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மல்லாவியில் தொழில் நிமித்தமாக தங்கியிருந்த நிலையில் கடந்த இரவு மல்லாவி – மாங்குளம் வீதி ஊடாக கொடிகாமத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் மாங்குளம் நகரிற்கு அண்மையாக உள்ள முனியப்பர் கோவிலுக்கு அருகே பயணிக்கும் போது வீதியைக் கடந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் சடலத்தை பொதுமக்களின் உதவியுடன் மீட்டு மாங்குளம் ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது கற்கோவளம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த ஆணந்தராஜா – விஜயானந்தன் வயது – 35, என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந் துள்ளார்.