ஊரடங்கு உத்தரவினை தொடர்வதற்கு அரசாஙகம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முடக்கல்நிலை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மோசமாக பாதிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்டங்களை கடுமையாக பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டங்கள் விதிக்கப்படாத பொதுமக்கள் முகக்கவசம் அணிவது போன்ற சமூக விலக்கலை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.