வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம் வகுக்கப்படுவதாக நேற்றைய தினம் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் நேற்றைய தினம் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்தில் 4,500 பேரும், வன்னியில் 4,500 பேரும் உள்வாங்கப்படவுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாதச் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.