யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நடமாடிய பகுதிகள் குறித்த தகவல்கள் அறியத் தருமாறு சுகாதாரப் பகுதியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்
அல்வாய் மனோகரா பகுதியில் கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் சிறுவனுக்கு தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இவர்கள், வடமராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும், எனவே இவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்கள் அல்லது, இவர்கள் சென்ற இடங்கள் பற்றிய தகவல்கள அறிந்தவர்களை உடனடியாக, சுகாதார திணைக்களத்துக்கு வழங்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.