மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதுச் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் அழகையா லதாகரன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிவரும் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரின் குடும்பங்களைச் சோந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.