மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவை நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் 30 நோயாளர்களுக்கான படுக்கை வசதிகள் உள்ளதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.