பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 14 தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் விடுமுறையில் சென்று திரும்பிய போதே, வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு சென்று வரும் வைத்தியர்கள், தாதியர்களினால் கொரோனா பரவும் அபாயமுள்ளது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழான வடக்கு வைத்தியசாலைகளோ, மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளோ மேற்கொள்ளாத நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மட்டும் தற்போது 16 தாதிய உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தியுள்ளது.